Friday, September 9, 2016

The Principal Upanishads by Dr.S.Radhakrishnan..my impressions.

 
by 
U 50x66
's review 
Sep 09, 2016  ·  edit

it was amazing
Read from March 05 to August 10, 2016

This is my impression about the famous book by Sarvepalli Dr. Radhakrishnan, a great exponent of philosophy, especially of Indian philosophy and the 2nd President of the India. My self trying to write up a 'review' of the book authored by such a great thinker is like a bird trying to drink up the entire ocean. I know I am a simpleton when compared to the stature of Dr. S.Radhakrishnan. Therefore, I try to record my impressions about 'The Principal Upanishads', as a guide to the new aspirants to understand the teachings of the Vedas/Upanishads of Indian philosophy.

Any work of a great poet or writer should be studied in the original language in which the author has brought it out. Only his own mother tongue would be good enough to really understand the feeling of the author. As such, it would be better to study the Upanishads in Sanskrit, to understand not only the meaning of the verses, but also to enjoy the poetic beauty of the language. If that is not possible, we must look for one 'who combines the acuteness and originality of the thinker with the learning and caution of the scholar, and who has also made such a study of the present thoughts to meet his readers on common ground,' as rightly pointed out by Mr. Edmond Holmes in his Introduction to this book. Dr.Radhakrishnan was well versed in Sanskrit and in English; and thus he could bring out the contents of Upanishads in a simple and beautiful English so that every reader could easily understand.

The Introduction itself runs to about 120 pages. This is very elaborate that it took about a month for me to complete the introduction. Unlike the other subjects, the philosophy of Indian thoughts requires slow study, since we can pass on to the next step only after reading, re-reading, come to an understanding, and then proceed further. If I am permitted to place my impression about that here, I would suggest the reader to complete the text first, starting from Brhad-aranyaka Upanishad and concluding with Vajrasucika Upanishad and then start reading the Intraduction. This will enable the new reader to get a synopsis of what all he has read and to dwelve on the subject once again.

Similarly, The fore-words by Sri Rabindranath Tagore and Edmon Homes could be read first, which provide a prelude of the subject, before we can go in for a detailed study.

Going into the text, the Upanishads are perhaps taken up for commentary based on their 'popularity' and the subject matter they deal with. The lengthy Brahad-aranyaka Upanishad is taken first and the little-heard of Pingala Upanishad and Vajrasuchika Upanishad are placed at the conclusion.

It could be seen from the upanishads that they do not only deal with philosophic subjects, but lay down instructions or guidance for the proper living of the humans. It is explained that how the Universe was created by the God by his will from a complete darkness or from nothing. 'In the beginning this world was only the self in the shape of a person (purusha). Looking around he saw nothing else. He became as large as woman and man in close embrace. From that arose husband and wife.' and thus goes Fourth Brahmana of Brahad-aranyaka Upanishad in explaining the creation of the world.

The dialogue between sage Yagnavalkya and his wife Maitreyi is a classic example of discourse on the absolute philosophy about the Self. The simple truth explained by him is that ' verily, not for the sake of the husband is the husband is liked; not for the sake of the child, the child is liked...but they all are dear only for the sake of the ones self'. That is just because everything gives happiness to oneself, he likes or dislikes the relatives etc. It is also stated that there may be many gods, but there is only one Brahman, who controls all activities in the world.

It lays down the life cycle of a man as of Brahmacharya or student-hood, Grahastha or a worldly or married life where he goes on to earn a livelyhood, protects, relatives, saints and performs sacrificial rites to gods, then comes the vanaprastha or leaving for the forest with his wife handing over the reigns to his children to lead a calm, meditative life and finally sanyasa or renunciation, where he quits everything and awaits final departure to his heavenly abode. This crates an impressive imagination of a happy and content life.

Taittiriya Upanishad, interestingly contains a convocation address to the students who are about to leave their teacher on completion of their education and training. The advises delivered are, satyam vadha, (Speak the truth), Dharmam chara (Practice virtue), svaadyaayan maa pramadha (Never stop learning), and so on. These preaching are applicable to all, for ever, from age immemorial to the present day, to the unending future of course. These are universal truths.

The volume contains about 1000 pages. Though the reading of this valuable book was time consuming since a quick-reading is not possible, it was never boring since this talks of never ending truths.

I strongly recommend this book for those interested in living the life in a proper way, irrespective of the caste, creed, religion. I understand that my write up is not conclusive, but hope that it would kindle an interest in the reader to take up the reading.

By the way, I appreciate the publishers Harper collins for bringing out this valuable book of enormous volume in a weightless print, that I could hold it in my hand without any effor or pain.

Thursday, August 18, 2016

சென்னையை அடுத்துள்ள நவக்கிரஹ கோவில்கள்- ஒரு திருவுலா.

     சாதரணமாகவே பணி ஓய்வுக்குப்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்னையை சுற்றியுள்ள திருக்கோவில்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.  தற்போது குடும்பச் சூழ்நிலையின் காரணமாக சென்னையை விட்டு கோவைக்குக் குடி பெயர்வதென்று ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் சென்னையின் போக்குவரத்து நெருக்கடிகளும், வெப்பமான சூழ்நிலையும், வியர்வையும் கசகசப்பும் நான் பதவி உயர்வு பெற்று 2002ல் சென்னைக்கு வந்ததிலிருந்து இந்த நகரத்தின் மீது இனம் காணாச் சலிப்பை ஏற்படுத்தியிருந்தது. பணி ஓய்வுக்குப்பின் ஊரை விட்டு ஓடி விட வேண்டும் என்றுதான் நினைத்தேன்.

    ஆனால் பணிக் காலத்திலேயே, மாலையில் அலுவலகத்தை விட்டுக் கிளம்பியபின், வீட்டிற்கு வரும் வழியில் பாரி முனையிலும், திருவல்லிக்கேணியிலும், மயிலையிலும் உள்ள கோவில்கள், மடங்கள் ஆகியவற்றுக்குச் சென்று வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன். இந்த நகரத்தில் இத்தனை கலாச்சார நிகழ்வுகளுக்கும், அவரவர் மத, மன நிலைகளுக்கேற்ற வழிபாட்டுத் தலங்களும்  உள்ளன என்பது பிரமிப்பைக் கொடுத்தது.

     ஆங்கிலேயர் ஆட்சி ஆரம்பித்த காலத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில், பாரிமுனையில் இன்றுள்ள காளிகாம்பாள் கோவில், சென்ன மல்லீஸ்வரர், சென்ன கேசவர் கோவில் ஆகியவை தங்கள் உண்மையான இருப்பிடத்தைவிட்டு ஆங்கிலேயரின் கோவில்களுக்கும், கோட்டைகளுக்கும் இடம் கொடுத்து, தாங்கள் இடம் பெயர நேர்ந்தது என்பதையும் , அவற்றை ஆங்கிலேயரிடம் துபாஷிகளாகப் பணியாற்றிய தமிழ்ப் பெருங்குடி மக்களே தங்கள் முயற்சியிலும், பொருட்செலவிலும் மாற்று இடங்கள் பெற்றுக் கட்டி முடித்தனர் என்பதும் ஓரிரு வரலாற்றுக் குறிப்புக்களில் காண முடிந்தது. இடம்பெயர்ந்தாலும், தங்கள் அருட்பெருக்கையும், பக்தர்களின் கூட்டத்தையும் இந்தக் கோவில்கள் இழந்து விடவில்லை என்பதும் விந்தை.

    2008ல் ஓய்வு பெற்றபின், சென்னையைச் சுற்றி சற்றுத் தொலைவிலுள்ள கோவில்களைத் தேடிச் செல்ல ஆரம்பித்தேன். என் சுற்றுப்புறத்தில்  உள்ளவர்களுக்கு அவ்வளவாக இத்தகைய நாட்டமில்லாததால்,  கோவில்களின் இருப்பிடங்களை அறிவதில் சிரமப்பட்டேன். அவ்வாறு ஒரு முறை திருவாலங்காடு திருத்தலத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த புத்தகக் கடையில் 'திருக்கோவில்கள் 234' என்ற நூல் ஒன்று கண்ணில் பட்டது. இதனை 'ஆலயப் பிரியர்' சிவ. சுந்தரம் அவர்கள் எழுதி இருக்கிறார்கள்.  இதனை வாங்கி வந்து படித்துப் பார்த்து பிரமித்துப் போனேன். தொண்டைமண்டலம் என்று அழைக்கப் படுகின்ற இன்றைய சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சி,திருவண்ணாமலை, வேலூர்  பகுதிகளில் உள்ள அத்தனை கோவில்களைப் பற்றியும், அவற்றுக்குப் புகைவண்டி, பேருந்து வாயிலாகச் செல்லும் வழிகளைப் பற்றியும், கோவில் வரலாறு பற்றிய சிறு குறிப்புமாக, மிக அரிய கையேடாக இந்நூல் இருந்தது.

   இதனைப் படித்தபின்தான் இத்தனை திருத்தலங்கள் சென்னைக்குள்ளேயே இருக்கின்றன என்பது புரிந்தது.  இதனைக் குறியீடாகக் கொண்டு ஒவ்வொரு கோவிலாக எனது இரு சக்கர வாகனத்திலும், பேருந்து மூலமாகவும், வாய்ப்புக் கிடைத்தபோது காரிலுமாக சென்று வந்தேன். இதுபோல தமிழகத்தின்இ பிற மாவட்டங்களிலுள்ள ஆலயங்களைப் பற்றி இந்த ஆசிரியர் எழுதிய நூல்கள் இருக்குமானால் மகிழ்வடைவேன். தற்போது  சென்னையை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேறவேண்டிய நிலை வந்தபோது பார்க்காத கோவில்களைப் பற்றிய ஏக்கம் எழுகின்றது.

    இந்த வரிசையில், ஏற்கனவே பார்த்திருந்தாலும், போரூரைச் சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்கள் அனைத்தயும் ஒரே நாளில் தரிசித்துவிடுவது என்று முடிவு செய்தேன். அதிசயமாக எனது துணைவியாரும் உடன் வருவேன் என்று கிளம்பினார்கள். 17/08/2016, புதன்கிழமை ஆவணி மாதப் பிறப்பன்று செல்வது என்று தீர்மானித்தேன். சோமங்கலம் போன்ற சில கோவில்கள் காலை பத்தரை மணிக்கெல்லாம் நடை சாத்தி விடுவார்கள் என்பதால் காலை ஆறு மணிக்கெல்லாம் அய்யப்பந்தாங்காலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

    முதலில் பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி கோவில். (அம்மன் தையல்நாயகி). இது செவ்வாய் (அங்காரகன்) தலம். ஆறு மணிக்கு அபிஷேகத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த அர்ச்சகர், தனியே நின்று கொண்டிருந்த எங்களைப் பார்த்ததும் தீபாராதனை செய்து கொடுத்தார். இன்றைய திருக்கோவில் உலா சிறப்பாக நடைபெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு பிரகாரம் வலம் வந்து கிளம்பினோம். மீண்டும் குமணன் சாவடி வந்துதான் மாங்காடு செல்ல வேண்டுமென்று நினைத்த எனக்கு அங்கிருந்த பூக்கடை மூதாட்டி, கோவிலை ஒட்டியே செல்லும் ஒரு சாலை நேராக மாங்காடு இட்டுச் செலும் என்று வழி காட்டி உதவினார். அந்த வழியே சென்று சுமார் ஐந்து கிலோமீட்டரில் அந்தப் பாதை நேரடியாக வெள்ளீஸ்வரர் கோவிலில் சேர்த்தது.



   மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலும், வெள்ளீஸ்வரர் கோவிலும் நான் சென்னைக்கு குடிவந்ததில் இருந்து எனது இஷ்ட தெய்வம்.  எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சென்று வருகின்ற தாய் வீடு.  கண்ணையும் மனதையும் நிறைக்கின்ற பெரிய சிவலிங்கம் இன்றும் என் உள்ளம் கவர்ந்து நின்றது. அர்ச்சகர் மிகவும் பழக்கமானவர் ஆனதால் எங்களைப் பார்த்ததும், 'வெளியூருக்குப் போறதாச் சொன்னீங்களே; காமாட்சி இன்னும் வழியனுப்பலையா?' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். ஊர்ப்பெயர்ச்சி தள்ளிக் கொண்டே போவதற்கு இதுதான் காரணமோ?

   சுவாமியின் பெயரே குறிப்பிடுவது போல இது வெள்ளியின் தலம்.. ஆம், சுக்கிரத்தலம். கடைகளும் குடிசைகளும் ஆக்கிரமித்திருந்த  இடங்களை  போன டிசம்பர் வெள்ளத்தின் போது மீட்டு, வேலிஇட்டு, சுக்கிரதீர்த்தம் என்று பெயரிட்டுள்ளனர்.

    இக்கோயிலில் சுவாமி மட்டும்தான்; அம்பாள் சன்னதி தனியாக இல்லை; மாங்காடு காமாட்சிதான் தனியாகக் கோவில் கொண்டு தவமியற்றிக் கொண்டிருக்கிறாளே? சுவாமிக்கு வணக்கம் செய்து அம்பாளைக் காணப் புறப்பட்டோம்.


   அக்கினிக்கு நடுவே ஒற்றைக் காலிலே நின்று உக்கிர தவம் செய்யும் காமாட்சி; அவளின் உக்கிரத்தை அடக்க ஸ்ரீ சங்கரர் தாபித்த மகாமேருவே இங்கு வரங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கும் தேவியின் சொருபம். அருகில் சென்றாலே உடலைச் சிலிர்க்க வைக்கும் துடிப்பை உணர முடியும். இந்தக் காமாட்சியம்மனின் மகாமேரு சந்நிதியிலும், வெள்ளீஸ்வரரின் சந்நிதியிலும்தான் கருவறைக்கு மிக அருகில் சென்று தரிசிக்க முடியும். வேறு எந்த கோவிலிலும் மூலஸ்தானத்துக்கு இவ்வளவு அருகில் செல்ல அனுமதியில்லை.   வணங்கி விடைபெற்று அடுத்த கோவிலுக்குக் கிளம்பினோம்.

     மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலை வழியாக வந்து தேரடியில் வலப்புறமாகத் திரும்பி சென்றால் சற்றுத் தொலைவில் நாகேஸ்வர சுவாமி கோவில். குன்றத்தூரில் பிறந்து சோழ மன்னன் அனபாயனிடம் அமைச்சராகப் பணியாற்றியவரும், அந்த மன்னன் வேண்ட, அறுபத்து மூவர் வரலாற்றை சுந்தரரின் திருத்தொண்டத் தொகையைக் குறிப்பாகக் கொண்டு 'பெரிய புராணம்' என்னும் சைவத் திரு நூலாக இயற்றியவருமான சேக்கிழார் கட்டிய கோவில். சேக்கிழார் சோழ மன்னனிடம் அமைச்சராக இருந்த போது திரு நாகேஸ்வரம் கோவிலில் உள்ள இறைவனிடம் மாறாக் காதல் கொண்டு, அதன் நினைவாக அவரது ஊரில் கட்டிய கோவில் இது என்று சொல்வர். இறைவர், நாகேஸ்வரர், அன்னையின் நாமம் காமாட்சியே தான். நாகேஸ்வரர் என்ற பெயர் கொண்டதால் நாக வடிவான ராகுவுக்குச் சிறப்புச் சேர்க்கும் கோவில். வணங்கி வெளிவந்து, குன்றதூரிலிருந்து  ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் வந்து, சோமங்கலம் சாலைக்கு இடது புறமாகத் திரும்பிப் பயணித்தால் சோமங்கலம் கோவிலை அடையலாம்.

    சென்ற முறை நான் தனியே வந்தபோது காலை 10.30 மணிக்கெல்லாம் வெளிக்கதவைப் பூட்டிக்கொண்டு அர்ச்சகர் கிளம்பத் தொடங்கியிருந்தார். வெகு தொலைவிலிருந்து வருகிறேன் என்று வேண்டிக் கேட்டபின் வெளிக்கதவைத் திறந்து உள்ளே செல்ல அரைமனதாக அனுமதித்தார். பூட்டிய கம்பிக் கதவினூடேதான் தரிசிக்க முடிந்தது. காலையிலே  சீக்கிரமாகவே திறந்து விடுவதாலும் பெரும்பாலும் பக்தர்கூட்டம் அதிகமில்லாததாலும் விரைவிலேயே நடை சாத்தி விடுவதாக அப்போது இருந்த அர்ச்சகர் சொன்னார்.

    இந்த முறை முன்னெச்சரிக்கையாக எட்டரை மணிக்கெல்லாம் கோவில் சென்று சேர்ந்து விட்டோம். ஸ்ரீபெரும்புதூர் சாலையிலிருந்து சோமங்கலம் சாலையில் திரும்பியதிலிருந்து இருபுறமும் பசுமையான காடுகள் நிரம்பிய இருபதடிச் சாலை, வறண்ட தார் ரோடுகளுக்குப் பழகிப்போன கண்களைக் குளிர்வித்தது.  சென்னையைச் சுற்றி இப்படிக் கோவில்களைத் தேடி அலையும் போதுதான் இன்னும் உயிரோடு இருக்கும் கிராமங்களைக் காண முடிகின்றது.

   இது போன்ற அமைதியான பாதைகள் வழியாகச் செல்ல நேரும்போது எல்லாம் என் 'எஜமானியம்மா' கேட்கிற வழக்கமான கேள்வியை இன்றும் கேட்டார். ' இங்கேயெல்லாம் ஏக்கர் என்ன விலையிருக்கும்? பேசாம இங்கே வந்திரலாமா?'  அடுத்த மாசம் பென்ஷன் வந்தாத் தான் செலவுக்கு வழியென்று தெரிந்தும் காட்சிகளின் இனிமை அறிவைத் தாண்டி மனதைத் தூண்டுகிறது என்பது எனக்கும் தெரியும்தானே..'இங்கேயெல்லாம்  கேபிள்  TV இல்லையாம்..சீரியல் பாக்க முடியாது' என்றேன். 'அந்த வீட்டிலே நிறுத்துங்க நானே கேட்டுக்கிறேன்..கோவிலில்லாத ஊர்கூட  இருக்கலாம்..கேபிள் இல்லாதா ஊரா?' என்றாள். நான் ஏன் வண்டியை நிறுத்துறேன்.

    கோவில்தரிசனத்தில் பாதையின் வசந்தம் பாதையை மாற்றிவிட்டது. சிறிய கோவிலானாலும்  சிறப்பாகப் பராமரிக்கப் பட்டுள்ளது. இந்த முறை இருந்த அர்ச்சகர் அபிஷேகம் முடிந்து தீபாராதனைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். கோவிலருகில் கடைகள் இருக்கும் என்று  பூசைப் பொருட்கள் வாங்காமல் வெறும் கையாய் வந்தது தவறு என்று உணர்ந்தேன்.  மீண்டும் ஊருக்குள் போய் ஏதேனும் வாங்கி வரலாம் என்று புறப்பட்ட என்னைத் தடுத்த அர்ச்சகர் 'அடுத்த முறை மறக்காம வாங்கி வாங்க..இப்போ இருக்கிறதை வைத்தே பூஜையை முடிச்சுடறேன் என்றார்'. இது எனக்கு 'அடுத்த முறைதான்' இருந்தும் இப்படித்தான் வந்திருக்கிறேன் என்பது இப்போதுதான் உரைத்தது.  இங்குள்ள சுவாமி சோமனாதீச்வர், அம்பாள் காமாட்சி அம்மன். சுவாமி சன்னதி தரிசனம் முடிந்து வந்ததும் அழகான பாலசுப்ரமணியர் தரிசனம் பிரகாரம் வலம் வந்து அம்மன் சன்னதியிலும், இக்கோயிலுக்குரிய கிரகமான சந்திரன் சன்னதியிலும் வணங்கினோம்.  ஆள் அரவம் இல்லாதவாறு ஊரை விட்டு ஒதுங்கி இருக்கிற கோவில். அதனால் தடுப்பு கதவு இருந்தும் கூட ஆங்காங்கே படுத்துக் கிடக்கின்ற பைரவர் வாகனங்கள்.

    தரிசனம் முடித்து மீண்டும் வந்த பாதையிலே குன்றத்தூர் நோக்கிப் பயணம். இப்போது காலை மணி ஒன்பதை நெருங்கி இருந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்குச்  செல்கின்ற மினி பஸ்களும்..அலுவலகம் செல்கின்றவர்களின் இரு சக்கர வாகனங்களுமாய்  ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் பாதை நிரம்பி வழிந்தது. வரும்போது இருபது நிமிடத்தில் கடந்த பாதையை இப்போது கடக்க நாற்பது நிமிடம் ஆனது. குன்றத்தூர் வந்து போரூர் செல்லும் வழித்தடத்தில் திரும்பி கோவூர் நோக்கிப் பயணம்.



     இந்தப் பாதையும் பள்ளிகள், கல்லூரிகள்,அலுவலகங்கள் செல்லும் முக்கியப் பாதை ஆனதால் இங்கும் சென்னை நகரத்திற்கே இயல்பான வாகன நெருக்கடி. இதை எதிர்பார்த்தே காரை ஓரம் கட்டிவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தேன்.  இடையிடையே புகுந்து ஒருவழியாய் கோவூரில் இடப்புறமாய் திரும்பி கோவில் வாசலை அடைந்தோம்.

   கோவிலின் இருபுறமும் பாழடைந்து கிடந்த நீண்ட கட்டடங்கள் அன்றைய நாளில் இத்திருக்கோவிலுக்கு வருகின்ற அடியார்கள் தங்குவதற்காக அமைக்கப் பட்டிருந்த சத்திரங்களாக இருக்க வேண்டும். இவ்வளவு பேர் வந்திருப்பார்கள் என்பதும், அவர்களுக்கெல்லாம் உணவும் உறைவிடமும் தரப் பட்டன என்பதும், இக்கோவில் அன்று எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தது என்பதற்குச் சான்று. குன்றத்தூரில் சேக்கிழார் வாழ்ந்தது போல, இந்தக் கோவூரும், கோவூர் கிழார் என்ற சங்கப் புலவரின் பெயரோடு புகழ் பெற்றிருக்கிறது. அவ்வையார், அதியமான், சோழன் நெடுங்கிள்ளி போன்றோரின் காலத்தில் இவரின் பெயரும் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கிறது. தொண்டை நன்னாடு சான்றோருடைத்து என்று இதனால் தான் அவ்வையார் பாடினார் போலும்.

   இக்கோவிலின் இறைவர் சுந்தரேஸ்வரர்.  மதுரை சுந்தரேஸ்வரர் கோவில் புதன் கிரகத்திற்கான சிறப்பான கோவில் என்பது போல புதன் தலமான இந்தக் கோவில் ஈஸ்வரனும் சுந்தரேஸ்வரர் ஆகத்தான் இருக்கிறார். அம்பாள் சுந்தரேஸ்வரருக்கேற்ற சுந்தராம்பிகை.  முன்புற கிழக்கு வாயில் பூட்டப் பட்டிருப்பதால், வடக்கு வாயில் வழி நுழைந்து  எதிரிலிருக்கும் விநாயகரை வணங்கி வலமாகச் சென்று சந்நிதியில் நுழைந்தால் சுவாமியையும், அம்மனையும் ஒரு சேரத் தரிசிக்கலாம்.  தரிசனம் முடித்து பிரகாரத்தில் இருக்கும் தேவதைகளை வணங்கி புறப்பாட்டோம்.

     மிகவும் பொறுமையாக வந்த என் இல்லத்தரசி மெல்ல கேட்டகேள்வி ...அடுத்து எந்த கோவில் என்பதல்ல; அடுத்து எங்கே நல்ல ஹோட்டல் இருக்கு என்பதுதான். ஆம், சர்க்கரை என்ற பொருள் என் இரத்தத்தில் அதிகம் இருக்கிறது என்பது தற்போதுதான் கண்டுபிடிக்கப் பட்டதால் நான் பட்டினி கிடக்கக் கூடாதென்பதை சுட்டிக் காட்டினார்.

   மீண்டும் குன்றத்தூர்-போரூர் சாலைக்கு வந்து போரூர் நோக்கிச் சென்று கெருகம்பாக்கம் பேருந்து நிறுத்தத்திற்கு எதிரே வலப்புறம் திரும்பி நீல்கிரிஸ் தாண்டி  இடப்புறம் செல்லும் சாலையில் திரும்பினால் நீலகண்டேஸ்வரர் கோவில்.



     கோவில் உள்ளே சென்றதும் இடப்புறம் கேது பகவானுக்கான நாகர் சந்நிதி. இதைப் பிறகு தரிசிக்கலாம். முதலில் நேரே தெரிவது ஆதி காமாட்சியம்மன் சந்நிதி. அந்தச் சன்னதிக்கு இடப்புறம் நீலகண்டேஸ்வரர்.  நின்ற இடத்திலேயே சுவாமியையும் அம்மனையும் ஒரு சேரத் தரிசித்துக் கொள்ளலாம்.  வெளியே வந்து நாகர் சந்நிதியை (கேது) வணங்கி பிரகாரம் வலம் வந்து வெளியே வந்தோம். மிகச் சிறிய கோவில்.  மணி காலை பத்தரை; நல்ல பசி.

    கோவிலை விட்டு வந்து கொளப்பாக்கம் சாலையில் திரும்பியதும்...அப்பாடி..அடையாறு ஆனந்த பவன்.. பசியும் தாகமும் தீர்ந்தன. அடுத்து நேரே கொளப்பாக்கம் செல்லும சாலையில் சென்று ஒரு திருப்பத்தில் அம்பேத்கார் சிலையை ஒட்டி இடப்புறமாய்செ ல்லும் சிறிய காங்கிரீட் சாலையில் சென்று மீண்டும் வலப்புறம் திரும்பினால்.. ஏகாந்தமாய்..அகஸ்தீஸ்வரர் கோவில்.


  மாநகரத்தின் நடுவே இருந்தாலும், அருகிலுள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்து மிகுந்திருந்தாலும், அதன் நடுவே பரந்துபட்ட இடமும், நிழல்தரும் மரங்களும், (நீரில்லாத) திருக்குளமுமாய் ஒரு கோவில். மரத்தடி மேடையில் தாராளமாய் அமர்ந்து தியானமே செய்யலாம் போலிருந்த சூழல்.

    உள் நுழைந்ததும் நேர் எதிரே உயரிய மேடை மீது சந்நிதி கொண்டிருக்கும் அகத்தீஸ்வரரும் ஆனந்த வல்லியும். சிறிய சந்நிதி; நிமிர்ந்து நின்றால் தலை இடிக்குமோ என்னும் அளவுக்கு தாழ்வான கூரை.  தீபாராதனை பார்த்து கீழிறங்கி வந்து இடப்புறமாய் சென்றால் வரிசையாக காசி விஸ்வநாதர், விசாலாக்ஷி, விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை. நாங்கள் சென்றது புதன் கிழமை ஆதலால் விஷ்ணுவுக்கு ஒரு குடும்பத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளை நடத்திக் கொண்டிருந்தனர். பின்னும் பிரகாரம் வலம் வந்தால் பெரிதான கால பைரவர் சந்நிதி, அதை அடுத்து சூரியனாருக்கு ஓர் சந்நிதி. இந்தக் கோவில் நவ கிரகங்களில் சூரியனுக்கான சிறப்பு கோவில். கோவிலை விட்டு வெளிவந்த பின்னும் பரபரப்பு தொற்றிக்கொள்ளாத அமைதியான சூழல் இன்னும் சிறிது நேரம் அங்கே நிற்கலாம் போல் தோன்றியது.

    அடுத்தது ஒரு VIP க்கான கோவில் ஆச்சே. தாமதம் பண்ணினால் தண்டனை கிடைக்குமோ என்று வண்டியைத் திருப்பிக்கொண்டு கொளப்பாக்கம்-கெருகம்பாக்கம் சாலையில் திரும்பினோம்; சனீஸ்வரனுக்கு சிறப்பான பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோவிலை நோக்கி.



   கொளப்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே செல்லும் ஒமேகா பள்ளி சாலையில் சுமார் ஐந்தாறு கிலோமீட்டர் கரடு முரடான சாலையில் சென்று ஓர் ஆற்றைக் கடந்து (அடையாறு??) வலப்புறம் செல்லும் சாலையில் இரண்டு கிலோமீட்டர் சென்றால் பொழிச்சலூர் ஊருக்கு நடுவே அகஸ்தீஸ்வரர் கோவில். சனிஸ்வரனுக்குச் சிறப்பான கோவில் என்பதால் பரிகாரப் பூஜைக்கான பொருட்களை விற்பதற்கான கடைகள் நிறைய இருந்தன. இதற்கு முன் ஒருமுறை ஒரு சனிக்கிழமையன்று சென்று கூட்டத்தில் மாட்டிக் கொண்டேன்.  மிக நீண்ட வரிசை. நல்லவரைக் காட்டிலும், தண்டிப்பவர் என்று நாம் நம்புபவருக்குத் தானே அதிகம் பயப்படுவோம். அனால் நேற்று புதன் கிழமை என்பதால் அதிகக் கூட்டமில்லை.

    உள்ளே நுழைந்து வலமாக வந்து சந்நிதிக்குள் தெற்குமுகமாக  நுழைந்தால் முதலில் அகத்தீஸ்வரர் சந்நிதி, தரிசனம் முடித்து வந்து ஆனந்த்வல்லியை தரிசித்து வந்தால், அருகிலேயே சனிஸ்வரனுக்கான சந்நிதி. எல்லோரையும்போல பயபக்தியுடன் வணங்கி (எனக்கு இப்போது ஏழரை) வெளிவந்து பிரகாரம் வலம் வந்தால் நுழைவு வாயில் அருகிலேயே கால பைரவருக்கான தனி சந்நிதி. சந்நிதிக்கு உள்ளேயே அவர் வாகனமான நாய் ஒன்று படுத்திருந்தது. தேய்பிறை  அட்டமியன்று இவருக்குச் சிறப்புப் பூஜைகள் உண்டென்று சொன்னார்கள்.

    பூவிருந்தவல்லியில் தொடங்கிய நவக்கிரக சந்நிதி வலம் போரூர் ராமனாதீஸ்வரர் கோவிலோடு நிறைவு பெற வேண்டும். இதற்காக பொழிச்சலூரிலிருந்து மீண்டும் கொளப்பாக்கம் நோக்கி பயணம் தொடங்கினோம். கொளப்பாக்கம் வந்து, கெருகம்பாக்கம் தாண்டி குன்றத்தூர்-போரூர் சாலையைப் பிடித்து  போரூர் power house அருகில் வலப்புறம் திரும்பி சிறிது தொலைவில் போரூர் ராமனாதீஸ்வரர் கோவில்.


    இந்தக் கோவிலுக்குச் செல்லும் சாலை வெகு காலமாகவே வண்டிகள் ஓட்டத் தகுதியற்ற நிலையிலேயே இருந்து வருகிறது. இதற்கு நேர் மாறாக கோவில் சிறப்பாகப் பராமரிக்கப் படுகிறது. ராஜகோபுரத்தின் உள்நுழைந்து கொடிமரமும் நந்தியையும் தொழுது உள் நுழைந்தால், பெரிதான சுயம்புலிங்கம். ஸ்ரீ ராமர் இலங்கைக்குச் செல்லும் வழியில் இங்குவந்து இந்த ஈஸ்வரரை குருவாக வழிபட்டதால் இது குருவுக்குச் (வியாழ பகவான்) சிறப்புச் செய்யும் தலம் என்று போற்றப் படுகிறது. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி சிறப்பு வழிபாடுகளோடு வீற்றிருக்கிறார். ஸ்ரீ ராமரே இங்கே குருவாக வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ ராமர் இங்கு வழிபட்டதால், வேறெந்த சிவன் கோவிலிலும் இல்லாத விதமாக இங்கு தீர்த்தம் வழங்கி சடாரி சார்த்தப் படுகிறது.  அம்பிகை சிவகாமசுந்தரி.  பிரகாரம் வலம் வந்தால் சுப்பிரமணியர் சந்நிதி கால பைரவர் சந்நிதி அம்மன் சந்நிதி, நக்கிரக சந்நிதிகள் வணங்கி, மீண்டும் கொடிமரத்தடியில் வணங்கி வெளிவரலாம்.

     இவ்வாறாக காலை ஆறுமணிக்கு ஆரம்பித்த நவக்கிரக உலா மதியம் சுமார் 12 மணியவில் நிறைவடைந்தது.  இந்த நீண்ட பயணம்அ லுப்பைத் தருவதற்குப் பதில் இது  போல அடுத்து எங்கு செல்லலாம் என்ற சிந்தனையையே தோற்றுவித்தது.

Tuesday, February 23, 2016

COMMENTARY ON BRAHMA SUTRA IN TAMIL BY SWAMI ASUTOSHANANDA

This is the commentary in Tamil of the famous 'Brahma Sutra' by sage Vyasa (or Badharayana). The Tamil commentary is by Swamy Asutoshananda of Sri Ramakrishna Math, Chennai. He has already rendered Tamil commentaries on various Upanishads, viz., Katha; Kena ; Ithereya; Thaithriya; Mandukya etc., They were all fine and simple to understand. This is also one among them.

'Brahma Sutra' is the compilation of Vedanta treatise of Vedic religion, now known as Hinduism. It contains four Chapters (1)Samanvaya: This establishes that the Universe was created by God- Who is one, the Omnipotent, Omniscient and Omnipresent. (2) Avirodha: Here the sage denies the arugments putforth by other beliefs, viz. Samkhya etc., elaborately quoting the contents of various Upanishads. (3) Sadhana: Here the Vidhyas or meditations to be practised by the Jivatma (human beings) to attain the Lotus Feet of the Almighty. (4) Phala: Here the fruits of deep meditaion towards the God are explained.

The Brahma Sutra quotes elaborately from the Upanishads; thus the reader evinces interest to read the Upanishads on completing the reading of this book. The commentaries by Swamiji are in simple and clear Tamil so that even a person with no prior knowledge of Vedanta can easily understand. The Glossary of Philosophical terms annexed to the book and a note on the Indian Philosophy are very useful.

I am glad that I read this book and would recommend it to all who know Tamil and who have an interest for Vedanta philosophy.

Wednesday, February 10, 2016

சித்தர்காடு - ஆலய தரிசனம்

 

                               



 சென்னைக்கு அருகிலுள்ள பல பிரசித்தமான, தொன்மையான  ஆலயங்களுள் சித்தர்காடு அல்லது சித்துக்காடு என்று அழைக்கப்படும் சிற்றூரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசூன குந்தளாம்பிகை சமேத ஸ்ரீ தாத்திரீஸ்வரர் கோவில் என்னும் சிவன் கோவிலும்,ஸ்ரீ சுந்தரவல்லி  சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில் என்னும் பெருமாள் கோவிலும் முக்கியமானவை.

    இந்த ஊர் பூவிருந்த வல்லியிளிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேருந்தில் செல்ல விரும்பினால் பூவிருந்தவல்லியிலிருந்து 54C என்ற தண்டரை செல்லும் பேருந்தில் சென்று சித்துக்காடு நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரைகிலோமீட்டர் நடந்து சென்று முதலில் சிவன் கோவிலையும், அடுத்து பெருமாள் கோவிலையும் சேவிக்கலாம். பேருந்துகள் அடிக்கடி இந்த வழியில் இல்லையென்று தெரிவித்தார்கள். அதனால் இருசக்கர வாகனம் அல்லது காரில் செல்லுவது மிகவும் வசதியானது.

    பூவிருந்தவல்லியிலிருந்து வருபவர்கள் பெங்களூர் சாலையில் நசரத் பேட்டையில் இருந்து யு டர்ன் எடுத்து வண்டலூர்-வாலாஜா வெளிவட்டச் சாலையின் வழியாகச் செல்வது மிகவும் வசதி. இந்தச் சந்திப்பிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் வெளிவட்டச் சாலையில் சென்று நெமிலிச் சேரிக்குச் சுமார் ஐந்து கிலோமீட்டர் முன்பாக 'திருமணம்' என்ற ஊருக்குச் செல்லும் கைகாட்டி இருக்குமிடத்தில் வெளிவட்டச் சாலையிலிருந்து பக்கச் சாலையில் இறங்கி சிறிது தூரம் சென்றால் சித்துக்காடு என்ற அறிவிப்புப் பலகையைக் காணலாம்.  அந்த வழியே சிறிது தூரம் சென்று இடப்புறம் திரும்பினால் செவன் கோவில் கோபுரம் கண்ணில் படும். அதைத்தண்டிச் சென்று அதை ஒட்டியுள்ள குளத்தை வளம் வந்தால் கருடாழ்வாருக்கு ஓர் சிறிய சந்நிதியும் அதன் எதிரே ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் சந்நிதி கோபுரமும் தெரியும். இந்தக் கோவில் காலை சுமார் பத்து மணிக்கே மூடி விடுவார்கள் ஆதலால், முதலில் இங்கு தரிசனம் முடித்து விடுவது நல்லது.

     இங்கு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் சந்நிதியும், சுந்தரவல்லித் தாயார் சந்நிதியும் தரிசித்துக்கொண்டு ஆண்டாள் சந்நிதிக்குச் சென்றால் அந்தச் சந்நிதி மண்டபத்தின் ஒரு தூணில் கருடக்கொடி சித்தர் உருவம் செதுக்கப் பட்டுள்ளது. இந்த சித்தருக்குப் பலரும் அபிஷேகம் விசேஷ பூஜைகள் என்று செய்வதுண்டு.
                                                             
 
   கோவிலுக்கு எதிரிலுள்ள கருடன் சந்நிதியையே சிலர் சித்தரின் 
ஜீவ சமாதி என்று குறிப்பிட்டனர். சிவன் வாகனமான நந்திஎம்பெருமானைமுதல் சித்தர் என்று குறிப்பிடுவதைப் போல விஷ்ணுவின் வாகனாமானகருடனையும் அவ்வாறு குறிப்பிடுகின்றனர் போலும்.

    பெருமாள் கோவில் தரிசனம் முடிந்து தெப்பக் குளத்தை ஒட்டி முன்புறமாக வந்தால், ஸ்ரீ தாதிரீஸ்வரர் கோவிலுக்கு வரலாம். ஸ்ரீ தாத்திரீஸ்வரர் சந்நிதியில் நின்றால் அம்மையையும் அப்பனையும் ஒரு சேரத் தரிசிக்கலாம். சந்நிதியை வலமாக வந்தால் விநாயகர் சந்நிதியைக் கடந்து ஸ்ரீ சுப்பிரமணியர், வள்ளி-தேவசேனையுடன் தரிசனம்; அருகிலேயே லக்ஷ்மி, சரஸ்வதி, கன்னியம்மன் சந்நிதி, அதை அடுத்து ஆதி சங்கரருக்குத் தனிச் சந்நிதி. இம்மூன்று சந்நிதிகளும் அமைந்துள்ள மண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் வழக்கமான சிற்பங்களுடன் பல சித்தர்களின் உருவங்களும் செதுக்கப் பட்டுள்ளன.  அவற்றுக்கு பௌர்ணமி தினங்களில் சிறப்பு வழிபாடு உண்டு என்று தெரிவித்தனர்.  






    இரண்டு கோவில்களுக்கும் பொதுவாக உள்ள தெப்பக் குளத்தினுள் பல சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்ததாகவும் சொல்லுகின்றனர். இந்த இடம் பழங்காலத்தில் அடர்ந்த காடாக இருந்ததாகவும் அந்தக் காட்டில் பல சித்தர்கள் வாழ்ந்ததாகவும் சொல்வதுண்டு.

    பெரிய கோவில்கள்; ஆனால் பெரிதும் ஆள் நடமாட்டமின்றியே உள்ளன. பூஜைக்குரிய பூ, பழம் முதலியன விற்கும் கடைகள் கூட அருகில் இல்லை. பெரும்பாலும் காலை பத்து மணியிலிருந்து பதினோரு மணிக்குள் இரண்டு கோவில்களும் நடை சாத்தப் படுகின்றன. 

     எனவே இங்கு வழிபட விரும்புகிறவர்கள் காலை 9-9.30 மணிக்குள்ளகவோ அல்லது மாலை 5 மணிக்கு மேலாகவோ செல்வது நல்லது. பூஜைக்குரிய பொருட்கள் பூவிருந்தவல்லி கோவில் அருகிலேயே வாங்கிச் செல்லவும். அமைதியான கிராமத்தினிடையே அதனினும் அமைதியான  சூழலில் அமைந்த கோவில்கள். தியானம் செய்ய அமைதியைத் தேடுபவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்கள்.
                                 

Sunday, February 7, 2016

Review of AUTOBIOGRAPHY OF A YOGI


                                                                            



This widely-read book has perhaps, been rightly described in the Preface by W.Y.Evans-Wents, Jesus College, Oxford, as A BOOK ABOUT YOGIS BY A YOGI. Few years ago, a friend of mine gifted the Tamil version of this book ஒரு யோகியின் சுய சரிதை. But it took me a long time to complete this version as it did not impress me very much and so a faster study was not possible. I thought that the original version in English might appeal to me otherwise since the translations could be faulty.

As the books published by Yogoda Satsanga Society are freely available on all online stores, I got a copy of 'Autobiography of a Yogi'. When starting the book, and describing his early years in life, Paramahansa Yogananda used to mock himself about his lesser interest in academic studies. At one stage, he pointed out that he could score a pass mark of only 33/100 in his college courses, that too with the divine intervention of his Guru Swami Shri Yukteshwar, the yogavatar. But the flow of the lucid English from start to the end of the Autobigraphy indicates that his academic perfection could not have been that bad. His vivid knowledge exposed in descriptions about philosophy, science, politics of his time, and especially of the Biblical quotes with due comparison the Hindu scriptures described all along his book, especially as notes given at the bottom of almost each page is clear indication of his natural intelligence.

But his narrations about most of the saints that he reports that he came in contact with during his quest for yoga and the mystical powers that he attributes to them, makes the biography, a fairy tale as Harry potter story. The examples can be quoted in 'the levitating saint', 'the saint with two bodies' etc.,. Without exception, every saint including the Mahavatar babaji, vouchsafe that the author is an incarnation and no ordinary human being. This perhaps makes the ordinary reader and an aspirant to undertake learning of yoga path to think that only the persons destined to become a yogi by birth only can easily become a yogi. 

Another impression that one gets is that through out the book, more stress is made on getting initiated to Kriya yoga, a technique stated to have been brought to earth by Mahavatar Baba and passed on through Shri Lahiri Mahasaya, Shri Yukteshwar and Paramahansa Yogananda. He repeatedly states that this technique is to be kept as a secret and that it cannot be learnt by anybody unless through Yogada Satsanga Society. It has been stated that the ancient scriptures of Hinduism were kept as secret among a smaller community and thus most of the Indians were denied the opportunity to learn Vedas/Upanishads etc., These scriptures were got translated into Persian by none other than Dara Shikho, the eldest son of Shajahan and brother of the cruel Aurangazeb. From Persian, these were translated to German by Max muller and others, and then came back to their motherland after foundation of Ramakrishna Mutt by Swami Vivekananda, who said that all the scriptures should be easily accessible to all who are interested to learn them. It is pathetic that the Kriya Yoga is being kept as a strictly guarded secret. It may not be out of place to point out that Sri Ramakrishna Mutt conducts meditation classes freely to all who are interested in learning. Further more Kriya yoga is not a newly invented technique, but a combination of existing yoga processes such as Maha Mudra, Navi Kriya, Kechari Mudra, Yoni Mudra etc.,. Then why such secrecy over it, one cannot understand.

It is also notable that the author has all along been very particular not to mention about Sri Ramakrishna Paramahamsa and his brilliant disciple Swami Vivekananda. The one place where Sri Ramakrishna is mentioned is that he worshipped Kali Ma in Dhakshineswar. Swami Vivekananda's name is mentioned at the fag end of the book only to indicate that he mentioned that the author would come as an incarnation to the universe. Where he has showered sufficient encomium on Mahatma Gandhi, he did not choose to mention anything about Swami Vivekananda who turned the religious world upside down just a few decades prior to the author and made the westerners to look to India for spiritual guidance. That he has founded an institution to propagate not only religion, philosophy and yoga but also to undertake social reforms and serve to the downtrodden has also not been mentioned anywhere, even though the the greatest saint also comes from Bengal as the author himself.

An impressive part of the book is the notes, given in almost all pages. The notes are very educative and informative giving excerpts from scriptures, Bible etc., and also scientific facts prevalent at the time. Collection and publication of the notes alone may bring an interesting book itself.
It is a fact that the book kindles an interest among the aspiring reader that one must put untiring effort in finding proper Guru and that he must not stagger in the path to achieve full success as a full fledged Yogi.

My impressions about KAVAL KOTTAM- A Sahitya Acadamy Award winning historical Tamil novel by S.Venkatesan

                                             

      Before starting to read this book, I had an idea about this book that it is a novel by S.Venkatesan that has been awarded the Sahitya Academy Award, and that it describes the history of Piramalai Kallars, a warrior tribe based in Southern districts of Tamilnadu, especially around Madurai. But on reading the book, I lost myself the idea that it was a fictitious novel, but that it is the record of the history of Madurai and its suburbs. As a native of Madurai, I had a natural inclination towards its history. I had already read the book by A.Ki.Paranthamanar named 'Madurai Nayakkar Varalaru' which was written in a style of History. First half of this novel has inherited the history of Madurai, from the fall of Pandiya dynasty, to the invasion of muslim rulers, then the retrieval of the city kingdom by the Vijayanagar chieftain, Viswanatha Nayakkar, from the book 'Madhurai Nayakkar Varalaru'. But this novel has dramatized the historical events and made the reading a pleasure and to complete the first half at a galloping speed.  The events leading to the accession of Viswanatha Nayak to the throne of Madurai Kingdom is elaborated in a fitting manner, explaining the loyalty of Viswanatha to Krishna Devaraya, the monarch of Vijayanagara. The incidents at the war fields during the Nayak dynasty in Madurai with the help of Poligars (palaykkaarar) is explained beautifully.

    The second part explains the downfall of Nayak rule after Thirumalai Nayak, another famous Nayak, who awarded the rights of guarding Madurai and suburbs to a tribe called Piramalai Kallars, living in Thadhanur, a fictitious village created in the imaginations of the author. Though the name of the village was fictitious, the incidents that are explained by the author from the raise to fall of the tribe are supported by documentary evidences collected by the author painstakingly for a period of about ten years. The records collected are evidenced at suitable places in the novel as letters shot from one officer to the other of the East India Company administratos and during the British Rule. The excesses committed by the Kallars in collecting the Kaval coolie (Fee for guarding), and in case somebody refuses to pay it, how they venged them fearfully by committing murders and resorting to robbery. The author has opined that the tribe is not the people of Tamilnadu, but the descendants of the ruthless Kalabhras, who ruled Tamilnadu during 2-3 centuries BC, a period which is still described as the black age in the history of Tamilnadu.

    The actions taken by the British Raj to curtail the activities of the Kallars is explained at the last chapters and in this attempt all the persons belonging to that community were either killed or were removed to the reformation camps. The novel ends with the destruction or disappearance of the community from the scenario. 

The historical events and the story-telling style of the author makes it easier for a reader to complete the book containing about 1050 pages of smaller fonts in a shorter period. It took hardly ten days for me to complete the entire book. It is satisfying that S.Venkatesan has now brought a voluminous novel Chandrahasam, and I am yet to lay hands on it. I hope to have this shortly.

Friday, February 5, 2016

Retirement community அல்லது அரை-இறுதிப் பயணம்.




         சில நாட்களுக்கு முன் senior  citizen home  என்று அழைக்கப்படும் ஒரு விடுதியில் தங்கியிருக்கின்ற எனது நண்பரையும் அவரது துணைவியாரையும் சென்று பார்த்து வரலாம் என்று முடிவு செய்தேன். அவர் சில நாட்களுக்கு முன்  மருத்துவ சிகிச்சை முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். மருத்துவ மனையில் இருக்கும் வரை நானும் அந்த மருத்துவ மனையில் பனி புரியு ம் எனது மருமகளும் அவரைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டோம் எனினும் வீட்டில் சென்று பார்க்கவில்லை என்ற குறை அவருக்கு இருந்து கொண்டே இருந்தது.  சென்னை நகரின் மையப் பகுதியில் வசதியான அடுக்கு மாடிக் குடியிருப்பில் அவர் குடியிருந்த போதும், திடீரென மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்ததும், அவரது இரண்டு குழந்தைகளும் வெளிநாட்டில் settle  ஆகிவிட்டனரென்பதும் அவரைப் பயம் கொள்ளச் செய்திருந்தது.போலும். 

       சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்ந்துகொள்ள அவர் வந்தபோது பிள்ளைகளுக்கு தொல்லை கொடுக்காமல் அருகிலிருக்கும் நண்பர்கள் உதவியுடன் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கருதினார். என்னுடன் அவர் கலந்தாலோசித்தபோது, அருகில் பிள்ளைகள் இருக்கவேண்டும் என்று ஆலோசனை கூறினேன். அவர் உங்களைப் போன்ற நண்பர்களே போதும் என்று சொல்லிவிட்டார். 

    ஆனால் மருத்துவ மனையிலோ அவரின் நெருங்கிய உறவினர் அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்வது இயலாதென்றும், வயது சென்ற அவரது மனைவியாரைக் கவனிக்கவே ஒருவர் தேவை என்பதால் அவரது பிள்ளைகள் ஒருவரை discharge  ஆகும் வரை உடனிருந்து கவனித்துக்கொள்ளச் செய்யுமாறும் தெரிவித்தனர். இந்தத் தகவல் கிடைத்து வந்த மகன் சரியாக அறுவைச் சிகிச்சைக்கு முந்தைய நாள் வந்து சேர்ந்தார்; ஒருவாரம் கழித்து மருத்துவமனையிலிருந்து  discharge  ஆகக் கூடிய தேதிக்கு அடுத்த நாள் return  ticket  புக் செய்துகொண்டு வந்திருந்தார். 
     இத்தகைய நிலை என் நண்பரது உள்ளத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ  தெரியவில்லை; வந்திருந்த மகனிடம் இது போன்ற நிலை மீண்டும் ஏற்படாத வண்ணம் எனக்கும் உன் அம்மாவுக்கும் போதிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் போ என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். அவரது மகள் இன்று வரை வரவேயில்லை என்பது கூடுதல் தகவல். அந்த மகளின் வீடு அருகில் இருக்கவேண்டும் என்பதற்காகவே தன்  ஓய்வூதியப் பலன்களைஎல்லாம் திரட்டி, அதற்கு மேல் சொந்த ஊரிலிருந்த சொத்துக்களைஎல்லாம் விற்று தனக்கும் தன்  மகளுக்கும் என்று இரண்டு வீடுகளை வாங்கி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. 
    இத்தகைய நெருக்கடிக்குள்ளான மகனும் மகளும் கலந்து பேசி ஒரு மூத்த குடிமக்கள் வாழ்விடத்தில் ஒரு flat  வாங்கி அதில் குடியேறி  இருக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டனர். 

    அங்கு சென்று விட்ட அந்த நண்பர் என்னிடம் தொலை பேசியில் பேசும் போதெல்லாம் அங்கு உள்ள வசதிகளைப் பட்டியலிட்டு அவசியம் நானும் என் மனைவியும் வந்து அந்த கண் கொள்ளாக் காட்சியை காணவேண்டுமென்று தொடர்ந்து வேண்டி வந்தார். அதனை ஏற்று, கொஞ்சம் தொலைவு அதிகம் என்றாலும் முயன்று சென்று அவர்களைப் பார்த்து வருவதென்று முடிவு செய்து ஒரு நாளைக் குறிப்பிட்டு அன்று வந்தால் அவர்கள் வெளியில் எங்கும் சென்று விடுவார்களா, வேறு ஏதேனும் வசதிக் குறைவு உண்டா..? என்று விசாரித்தேன். ஒரு தடையும் இல்லை, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் .வரும் அன்று காலை ஏழு மணிக்குள் எனக்குத் தெரிவித்து விட்டு வாருங்கள் என்று வேண்டினார். 
      அன்றிலிருந்து நான் புறப்பட்டு செல்லும் நாள் வரை தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து, வருவதற்கான பாதையைக் குறித்தும் எந்த நேரம் வந்தால் போக்குவரத்து குறைவாயிருக்கும் என்றும்  தொடர்ந்து தெரிவித்துக் கொண்டிருந்தார்.  அந்த ஆர்வம், எங்களின் வருகையை  அவர் எவ்வளவு எதிர்பார்க்கிறார் என்பதைத் தெரிவித்தது. நாங்கள் செல்வதற்கு முதல் நாள் எங்கள் பக்கத்து வீட்டு நண்பர் இதைக் கேள்விப் பட்டு, மூத்தக் குடி மக்கள் இல்லம் எப்படியிருக்குமென்று நானும் பார்க்க வேண்டும், நானும் உடன் வரவா என்றார். இதை நான் என் நண்பருக்குச் சொல்லவும் மிகவும் ஆர்வமாக, கண்டிப்பாக அவரையும் குடும்பத்தோடு அழைத்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டார். அன்று இரவே திரும்பவும் அழைத்து நாளை  காலை 10 மணிக்குப் புறப்பட்டு வந்து விடுங்கள், உங்கள் நால்வருக்கும் மதிய உணவு எங்களோடுதான்,இதை மறுக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டார். 
       இதோ புறப்பட்டுவிட்டோம்; எப்படியும் சாப்பாடு மதியம் ஒரு மணிக்குத் தானே, சீக்கிரம் போய்  போரடிக்குமே என்று நாங்கள் வழியிலிருக்கும் கோவில்களுக்குச் சென்று விட்டு போகலாம் என்று கோவில் ஒன்றில் இறங்கினோம். அதற்குள் நான்குமுறை அவரது phone ; ஏன் இன்னும் வரவில்லை, கட்டாயம் வந்து விடுவீர்கள்தானே.. என்று. தொடர்ந்த இந்த ஆர்வம் எனக்குள் ஓர் கழிவிரக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. பல நாட்களாக நண்பர் உறவினர்  யாரும்  அவரகளைப் பார்க்கச் செல்வதில்லை போலும் என்ற உண்மை அப்போதுதான் உறைக்கத்  தொடங்கியது. 
    மீண்டும் தொடர்ந்து விசாரித்துக் கொண்டு ஒரு காட்டுக்குள் கட்டப்பட்டிருந்த அந்தக் concrete  jungle ஐ  கண்டுபிடித்தோம். மிகத் தொலைவிலிருந்தே அந்தக் கட்டிடத்தைப் பார்த்தபோது..அந்தக் கட்டிடத் தொகுப்பின் வாயிலில், எரிக்கும் வெயிலில் வயதான ஒருவர் நின்று தீவிரமாகக் கையை வீசிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதற்குள் phone call. அவர்தான். அந்தக் கார் உங்களதுதானே.? வாயிலில் நான் நிற்கிறேனே பார்த்து விட்டீர்களா..? என்று ஆர்வமாகக் கேட்டார். ஆமா சார், பாத்துட்டேன். நீங்க உள்ளே போங்க வந்திடறேன் என்றேன். நீங்க வாங்க சார்..நான் நிற்கிறேன் என்றார். 
      அருகில் சென்று பார்த்தபோது வாயடைத்துப் போனேன். அரசுப் பணியில் மிக உயர்ந்த நிலை அடைந்து ஓய்வு பெற்றவர் அவர். அவரது ஆணையின் கீழ் பணியாற்றிய அதிகாரியாக இருந்தவன் நான்.  அத்தகையவர், இன்று அவரைப் பார்க்க நண்பர்கள் வருகிறார்கள் என்றவுடன் மகன்/மகள் கல்யாண வீட்டில் வரவேற்புக்கு நிற்பதைப் போல அபூர்வமாக உடையணிந்து வெளியில் நின்று வரவேற்றதும், என் காரை இடம் பார்த்து நிறுத்த உதவியதும், வாசலில் நின்ற காவலர்களை அழைத்து, என் friends ..என்னைப் பார்க்க வந்திருக்கிறார்கள், என்று பெருமிதமாக அறிமுகப் படுத்தியதும் என் உள்ளத்தைத் தைத்தது.

    என் பக்கத்து வீட்டு நண்பரும் அவரது துணைவியாரும் அவர்களுக்கு அறிமுகமில்லை என்றபோதும் அவர்களும் ஆர்வத்துடன் அவரைப் பார்க்க வந்ததில் அவருக்கு மிக்க மகிழ்ச்சி. (அவர்கள் வந்தது வீட்டைப் பார்க்க...அவரது மகளும் கூட வெளிநாடு செல்லத் திட்டமிருன்தனர் போலும்).

   வீட்டிற்குள் சென்றவுடன் அவரது துணைவியாரும் மிக்க மகிழ்ச்சியோடு எங்களை வரவேற்றார். எனது மனைவியும், பக்கத்து வீட்டு அம்மையாரும் வந்ததில் அந்த அம்மையாருக்கு மிக்க மகிழ்ச்சி..பல நாட்களுக்குப்பின் பெண்களின் துணை கிடைத்ததில்.  இருவருமாக அவர்களின் பக்கத்து, எதிர்வீட்டு நண்பர்களை அறிமுகப் படுத்தினர். 'இவர் ...பணியிலிருந்து ஒய்வு பெற்றவர். வயது 82. இவர் பையன் அமெரிக்காவிலிருக்கிறான். இப்போதான் வந்து போனான்..இனி அடுத்த வருஷம் வருவான். மகள் தாம்பரத்தில் இருக்கிறாள். மாசம் ஒருமுறை வருவாள்' அந்த முதியவர் முயன்று புன்னகைத்துத் தலையை மென்மையாக அசைத்தார். அவர் உட்கார்ந்திருந்தது சக்கர நாற்காலி.  எதிர் வீட்டிற்கு அழைத்துச் சென்று 'இந்த அம்மாவுக்கு 90 வயது.. வந்த புதிதில் lift  ஏறக் கூடப் பயப்படுவார்கள். இப்போ பரவாயில்லை. இவங்க மகள்...' என்று தொடங்குமுன்..அந்த அம்மையார்..'உச்..' என்ற ஒற்றை ஒலியில் தொடர்ந்து சொல்ல வேண்டாமென்று அடக்கினார். கையில் விலை உயர்ந்த designer  walking  stick . அதை எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்று அந்த அம்மையார் demo  காட்டினார், மிகுந்த பெருமையாக. இப்படி நாங்கள் பார்த்த பலரும் உட்கார்ந்த இடத்தை விட்டு அசைய முடியாதவர்கள்.  எங்களைப் பார்த்து அவர்கள் சிந்திய புன்னகையில் மகிழ்ச்சியோ, அன்னியோன்னியமோ இல்லை..விரக்தியும் வெறுமையுமே இருந்தன. 'எங்க friends ' என்ற நண்பரின் அறிமுகத்தில் பெருமையும்..அதைக்கேட்ட அந்த inmates  முகத்தில் பொறாமையும் இருந்தன.
    இங்கே இருக்கிற எல்லோருடைய பிள்ளைகளும் வெளிநாட்டிலேதான் இருக்கிறார்களா என்ற என் கேள்விக்கு அவர் பலத்த சிரிப்பைப் பதிலாக்கினார். 'அப்படி இருக்கிறவங்க பரவாயில்லை. இங்கேயே அடையாறு, கிண்டி மாம்பலம், மயிலாப்பூரில் எல்லாம் இருக்கிற பிள்ளைகள் கூட இங்கே கொண்டு வந்து விட்டு விடுகிறார்கள். ரெண்டு பேரும் வேலைக்குப் போகிறவர்கள் அல்லவா.'.' வாரம் ஒரு முறை வந்து பார்ப்பார்களோ'  என்ற கேள்விக்கு ' இவுங்க phone  பண்ணி வரச் சொன்னா வருவாங்க..ஆனா பெரும்பாலும் யாரும் அப்படி வரச் சொல்வதில்லை..எல்லோரும் நல்ல நிலையிலிருந்தவர்கள்.தன்மானம் மிக்கவர்கள் அல்லவா.மிகவும் தேவையானால் நிர்வாகத்தினர் தெரிவித்து வரச் சொல்வார்கள்.  ' என்றார். அந்தத் 'தேவை' என்ன என்பது சொல்லாமலே புரிந்தது.
     திரும்ப அவரது portion  இல்  நுழைந்த நண்பர் தெரிவித்தார்.' இங்கே ஏறத்தாழ 250 குடியிருப்புக்கள் உள்ளன. இவற்றில் 50க்கும்  குறைவானவற்றில்  தான் கணவனும் மனைவியுமாகத் தங்கியிருக்கின்றனர். மிகுந்தவற்றில் ஆணோ , பெண்ணோ  தனி ஆளாகத்தான் இருக்கின்றனர். எங்களுக்காவது பரவாயில்லை..பேசிக்கொள்ளவாவது அல்லது சண்டை போட்டுக்கொள்ளவாவது துணையிருக்கிறது. அதுவும் இல்லாதவர்கள்  பாடு ரொம்பக் கஷ்டம். இதில் நான் கவனித்த விஷயம் என்னவென்றால்..கணவனை இழந்த பெண்கள் துணிச்சலாகத் தங்கள் தேவைகளைக் கவனித்துக் கொள்பவர்களாக..தன்னம்பிக்கை உள்ளவர்களாகக் காண்கின்றனர்; ஆனால் மனைவியை இழந்த கணவர்கள் சோகமே உருவாய், செவிலியர் உதவியுடனேயே எந்தக் காரியமும் செய்து கொள்ள வேண்டியவர்களாகிறார்கள்' என்றார் .
    
 அங்கு உள்ள 'வசதிகள்'குறித்து அவர் விளக்கினார்..'பெரும்பாலானவர்களுக்கு  அவர்களுடைய பிள்ளைகள் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கி கொடுத்து விடுகின்றனர். பராமரிப்பு, மின்சாரக்கட்டணம் போன்றவை தனி. செவிலியர் உதவி வேண்டுமென்றால் அதற்கு மணிக்கு இவ்வளவென்று கட்டணம், இதற்குள்ளேயே தனியார் மருத்துவமனையின் அறையொன்று இருக்கிறது, மருத்துவ பரிசோதனைக்குத் தனிக் கட்டணம், இங்கேயே உணவு விடுதி இருக்கிறது. ஒரு ஆளுக்கு மாதத்துக்கு 90 டோக்கன்.அதற்குரிய கட்டணத்தோடு. உங்கள் இடத்திற்கே உணவு வரவேண்டும் என்றால் தனிக் கட்டணம். காலை காபி நீங்கள் நடந்து சென்று குடிக்க ஒரு கட்டணம்..உங்கள் அறைக்குக் கொண்டு வர கூடுதல் கட்டணம். உங்களைப் பார்க்க விருந்தினர் வந்தால் காலை 7 மணிக்குள் தெரிவித்துக் கட்டணம் செலுத்தினால் சாப்பாடு உண்டு. இல்லையேல் சாப்பாட்டு நேரத்திற்கு வெளியே போக வேண்டியதுதான். அதனால்தான் நான்கு நாட்களாக உங்களை த் திரும்பத் திரும்பக் கேட்டு உறுதி செய்து கொண்டேன். எதற்கும் நாம் பணம் செலுத்த வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் மாசக் கடைசியில் பில் உங்களை இங்கே சேர்த்து விட்ட பிள்ளைக்குப் போய் விடும். அவர்கள் online  payment  செய்து விடலாம். ரொம்ப வசதியில்லையா..?
  உடல் நலம் சரியில்லாமல் போனால் இங்குள்ள மருத்துவர் பார்த்து மருத்துவமனைக்குப் போய்  விடுங்கள் என்று சொன்னால் இங்கேயே ஆம்புலன்ஸ்  இருக்கிறது. மருத்துவமனை வாசலில் இறக்கிவிடுவார்கள். உங்கள் உறவினர் யாரேனும் வந்து அதன் பிறகு ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்ள வேண்டும். உறவினர் யாரும் இல்லையென்றால், உங்களை மருத்துவமனையில் அட்மிட் செய்ய வேண்டுமானால், தனிக் கட்டணம். அதோடு அவர்கள் பொறுப்பு தீர்ந்தது..பிறகு அந்த மருத்துவ மனையாச்சு நீங்களாச்சு. வருஷத்துக்கு ஒருமுறை உங்கள் பிள்ளைகள் வெளிநாட்டிலிருந்து வந்து உங்களோடு தங்க விரும்பினால் அவர்களுக்கு இங்கே கெஸ்ட்   ஹவுஸ் உண்டு..ஆனால் அது பெரும்பாலும் காலியாகவே இருக்கும். வருபவர்கள் வெளியே அறை  போட்டு தங்கி விட்டு அவ்வப்போது வந்து போவார்கள். இங்கேயே தங்கியிருக்க விரும்புவதில்லை.
     'இதையெல்லாம் விட ஒரு பெரிய சர்வீஸ் உண்டாம்'..என்று சொல்லி நிறுத்தினார். சிறிது இடைவெளிக்குப்பின் குரல் தழுதழுக்க தொடர்ந்தார்  'ஒருவேளை இங்கே இருப்பவர் இறந்து போய்  ஈமக் கிரியை செய்ய பிள்ளைகள் வரமுடியவில்லை என்றால், அவர்களே உடலை எரித்து சாம்பலை ஒரு container  ல்  வைத்து விடுவார்கள். பிள்ளைகள் முடியும்போது வந்து அதை காசியிலோ ராமேச்வரத்திலோ கரைத்து பிதிர்க்கடனைச் செலுத்தலாம். ம்..சொல்ல விட்டுப் போச்சே..எரிக்கிறதை skype ல அங்கே இருந்தே பிள்ளைகள் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்வார்களாம்...அதற்குத் தனிக்கட்டணம்'.  அங்கே இருந்த ஆறு பெரும் 60ஐக்  கடந்தவர்கள். அனைவரும் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தோம். அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்கவே தோன்றாமல் கவனத்தைத் திருப்பி ' இங்கே என்ன கேபிள் டிவி யா..இல்லை dish  ஆ என்று பேச்சை மடை மாற்றினேன். 
     'சரி.. சரி ..சாப்பிடப் போவோம்..இல்லேன்னா கூட்டம் வந்திடும் என்றார்.  கீழே இறங்கி இரண்டு பிளாக்  தாண்டி நடந்து போய் சாப்பாட்டு அறையை அடைந்தோம். எங்கு பார்த்தாலும் walker ..walking  stick , சக்கர நாற்காலியும் தள்ளுனரும்..எல்லோரிடமும் அழைத்துப் போய் அவரும் அவர் மனைவியும் 'எங்க friends ..எங்களைப் பார்க்க வந்திருக்காங்க. எங்களோடு சாப்பிட்டு evening  தான் போவாங்க' என்று அறிமுகப் படுத்தினர்.  அதிலேயே சீக்கிரமாப்  போகணுமுன்னு கிளம்பிடாதேடா பாவி என்ற குறிப்பும் இருக்கக் கண்டேன். 
 அறிமுகப் படுத்தப் பட்ட அத்தனை பேரும் ஒருமித்துக் கேட்ட கேள்வி 'உங்க பிள்ளைகள் எந்த நாட்டிலே இருக்காங்க..?'  'எங்க கூடத்தான் இருக்காங்க ' என்ற எங்கள் பதிலைக் கேட்டு அவர்கள் சொன்ன 'நல்லவேளை..பரவாயில்லை.' என்ற குறிப்புக்களில்  இருந்தது மகிழ்ச்சியில்ல..ஆற்றாமைதான் என்பது நன்றாகவே புரிந்தது.
     வீடு திரும்பும் போது காரில் உடன் வந்த அடுத்த வீட்டு நண்பரும் அவரது துணைவியாரும் எனது துணைவியாரும் நீண்ட நேரம் எதுவும் பேசவில்லை. நான் பேச்சை இப்படி முடித்து வைத்தேன் ' இப்படியெல்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சுதான்  அந்தக் காலத்திலேயே எங்க அப்பா SSLC க்கு மேலே என்னைப் படிக்க வைக்க முடியாதுன்னு சொன்னார் போல..'
     பிள்ளைகளை நல்லாப் படிக்க வைக்கிறது ஒரு தப்பா..?